எலுமிச்சை சாதம்
Share
எலுமிச்சை சாதம்
எலுமிச்சை சாதம் செய்வது எப்படி
லெமன் சாதம்,லெமென் ரைஸ்
தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம்- 1 கப்
எலுமிச்சை- 3
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சைமிளகாய்- 2
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
காயம்- சிறிதளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு- சிறிதளவு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
நிலக்கடலை ஒரு கைப்பிடி
Method
லெமன் சாதம் செய்முறை
சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும்(குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்)
வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.
எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும், கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு கடுகு வெடித்தவுடன் சிவக்க வறுபட வேண்டும். துருவின இஞ்சி, பச்சைமிளகாய்(பச்சைமிளகாயை நீளமாக நறுக்கலாம், அல்லது மிகவும் பொடியாக நறுக்கிப் போடலாம்), கறிவேப்பிலை, காயம், மஞ்சள் தூள் அனைத்தும் போட்டு வதக்கவும்.
தனியொரு வாணலியில் எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.
தாளிசப்பொருட்களுடன் எலுமிச்சையைப் பிழிந்து விடவும்.
ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.
சுவையான எலுமிச்சை சாதம் தயார், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
பூண்டு-மிளகாய் சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி
Hits: 10878, Rating : ( 5 ) by 1 User(s).