பூண்டு-மிளகாய் சாதம்
Share
பூண்டு-மிளகாய் சாதம்
பூண்டு-மிளகாய் சாதம் செய்வது எப்படி
தேவையானவை
பச்சைமிளகாய் - 6,
பூண்டு பல் - 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி - ஒரு கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, வெங்காயம் - கால் கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
Method
பூண்டு-மிளகாய் சாதம் செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
சிறிது வதங்கியதும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இதனிடையே, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த விழுதுதை வதங்கி கொண்டிருக்கும் காய்கறி கலவையில் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
ஆறவைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
சுவையான பூண்டு-மிளகாய் சாதம் சாப்பிட தயார்
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
எலுமிச்சை சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி
Hits: 4592, Rating : ( 5 ) by 1 User(s).