பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
Share
பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
தக்காளி பிரியாணி - தேவையானவை
1. பாசுமதி அரிசி – 1/2 கிலோ (3 நபருக்கு)
2. தக்காளி பெரியது – 6
3. பெரிய வெங்காயம் – 4
4. பச்சை மிளகாய் – 4
5. ஏலக்காய்-4
6. பட்டை – 4
7. கிராம்பு -4
8. இலவங்கம் -4
9. பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
10. டால்டா – 50 கிராம்
11. நெய் -50 கிராம்
12. இஞ்சி பூண்டு விழுது – 50 கிராம் அளவு
13. சிறிது மஞ்சள் – தேவையான அளவு
14. மிளகாய் தூள் – தேவையான அளவு
15. உப்பு – தேவையான அளவு
16. கொஞ்சம் கறிவேப்பிலை மற்றும் புதினா இலை
17. தண்ணீர் – 1 1/2 லிட்டர்
Method
தக்காளி சாதம் செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் டால்டாவை ஊற்றவும்.
இது சிறிது சூடான பின்பு பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலக்காய் இவற்றை போட்டு ஒரு முறை கிளரிவிடவும்.
அதன்பின் இஞ்சி பூண்டு விழுது சேர்தது பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா இலை போட்டு நன்கு கிளரிவிடவும்,
இத்துடன் தக்காளி, மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியவுடன் தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு நன்கு ஒரு முறை கிளரிவிட்டு குக்கரை மூடி விடவும்.
காத்திருங்கள் விசில் வரும் வரை ( 3 விசில் போதும் )
குக்கர் விசில் அடங்கியவுடன் சூடாக பரிமாறவும்.
இதற்க்கு வெங்காய தயிர் பச்சடி அருமையான பக்க பதார்த்தம்
Hits: 4701, Rating : ( 5 ) by 1 User(s).