குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி
Share
குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி?
6 மாதம் முதல் 2 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 1 கிலோ
சம்பா கோதுமை- 1 கிலோ
முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ
கொள்ளு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
முந்திரி - 100 கிராம்
ஏலம் - 8
விருப்பட்டால் பாதாம் சேர்க்கலாம்.
வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்தது)
கம்பு - 100 கிராம்
மக்காசோளம் - 100 கிராம்
சோயா - 100 கிராம்
சுண்டல் - 100 கிராம்
சத்து மாவு செய்முறை
கேழ்வரகை முளைக்கட்டி, காயவைக்கவும்
ஏலம் தவிர்த்து மற்ற அனைத்தையும் வறுத்துவைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
சத்து மாவு கஞ்சி தேவையான பொருட்கள்
தயாரித்த சத்து மாவு பொடி - 2 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
சத்து மாவு கஞ்சி செய்முறை
இரண்டு தேக்கரண்டி மாவை தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து, அதை வடித்து கொள்ளவும்.
அந்த கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.
அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கி விடவும்.
குழந்தைகளுக்கான சத்து மாவு கஞ்சி தயார், இது மிகவும் சத்து நிறைந்தது.
குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
- 1 வயது குழந்தைக்கான உணவு
6 மாத குழந்தைக்கான உணவு
8 மாத குழந்தைக்கான உணவு
கஞ்சி
கிச்சடி
கூழ்
சாதம்
ப்யூரி
Hits: 11835, Rating : ( 5 ) by 1 User(s).