பனீர் பிரியாணி
Share
பனீர் பிரியாணி
பனீர் பிரியாணி செய்வது எப்படி?
தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கப்,
பனீர் துண்டுகள் - அரை கப்,
கொதிநீரில் ஊற வைத்து அரைத்த மிளகாய் பேஸ்ட் - அரை டீஸ்பூன்,
வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்,
பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 1,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு,
நெய், எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
Method
குக்கரில் எண்ணெய் விட்டு, பனீர் துண்டுகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கியதும் அரைத்த மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு, உப்பு, தண்ணீர் விட்டுக் கலக்கவும்.
அதனுடன் வறுத்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து,
குக்கரை மூடி மிதமான தீயில் வேக விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான பனீர் பிரியாணி ரெடி.
பரிமாறுவதற்கு முன் வெங்காயத்தாள், எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.
Hits: 4594, Rating : ( 5 ) by 1 User(s).