மாங்காய் சாதம்
Share
மாங்காய் சாதம்
மாங்காய் சாதம் செய்வது எப்படி
தேவையானவை:
அரிசி - ஒரு கப்,
கிளிமூக்கு மாங்காய் (பழுக்காமல், ஸ்வீட்டான மிதமான மாங்காய்) - 4
(தோல்சீவி துருவிக் கொள்ளவும்)
கடுகு - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்த மிளகாய் - 3,
நறுக்கிய மல்லித்தழை - கால் கப்,
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்.
Method
மாங்காய் சாதம் செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும்.
மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகைப் போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
நன்றாக வறுபட்டதும், மாங்காய் துருவலை போட்டு வதக்கி, மசாலா விழுது, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கழித்து சமைத்த சாதத்துடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
சுவையான மாங்காய் சாதம் தயார், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
பூண்டு-மிளகாய் சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி
Hits: 2824, Rating : ( 5 ) by 1 User(s).