சஞ்சீவினி - புற்றுநோய் வராமல் தடுக்கும் கசாயம்
Share
சஞ்சீவினி - புற்றுநோய் வராமல் தடுக்கும் கசாயம்
புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் அருமருந்து - சஞ்சீவினி மூலிகை கசாயம்
புற்றுநோய் வராமல் தடுக்க இந்த சஞ்சீவினி மூலிகை கசாயத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
வில்வ இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
துளசி இலை - ஒரு கைப்பிடி
மாவிலை - ஒரு கைப்பிடி
அருகம் புல் - ஒரு கைப்பிடி
அத்தி இலை - ஒரு கைப்பிடி
வெள்ளை வெற்றிலை - 15
மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை
Method
செய்முறை
முதலில் வில்வ இலை, வேப்பிலை, துளசி இலை, மாவிலை, அருகம் புல், அத்தி இலை மற்றும் வெள்ளை வெற்றிலை அனைத்தையும் எடுத்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். அதனை ஒரு மண் சட்டியில் போட்டு அதில் இரண்டரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதிக்க வைத்து 500 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் அருமருந்தாகும். இந்தக் கசாயத்தை வாரத்திற்கு ஒரு நாளாவது தயார் செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் தலா 50 மி.லி அளவாவது வெறும் வயிற்றில் காலை வேளையில் குடித்து வந்தால் புற்று நோய் வராமல் தடுக்க முடியும்.
Hits: 439, Rating : ( 5 ) by 1 User(s).